சென்னை:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால் வழக்கினை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போது இருமுறை இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் மற்றொரு நீதிபதி புதிதாக விசாரணை நடத்துவதே முறையாக இருக்கும் எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனக் கூறி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு வழக்குகள்... வேறு நீதிபதிக்கு மாற்றமா? மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் தரப்பு