தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்தியாளர் கொலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்! - chennai journalist murder

சென்னை: தாம்பரம் அருகே படுகொலை செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் களத்தில் உள்ள பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்புத் தர வலியுறுத்தியும் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் கொலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்!
செய்தியாளர் கொலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்!

By

Published : Nov 9, 2020, 2:21 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த நடுவீரன்பட்டு புதுநெல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழன் டிவி தொலைக்காட்சி நிருபர் மோசஸ் நேற்றிரவு(நவ.08) அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மூன்று பேர் சோமமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக முக்கியக் குற்றவாளியான திமுக உறுப்பினர் நவமணி, விக்னேஷ், வெங்கடேஷ், மனோஜ் ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதையடுத்து, 100க்கும் மேற்பட்ட பத்திரிகை, ஊடகத் துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

மேலும் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்; களப்பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும்; 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், படுகொலை செய்யப்பட்ட செய்தியாளர் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கக்கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...நில அபகரிப்பு செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்: தந்தை கண்முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details