அதிமுக கூட்டணியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஜான் பாண்டியன் எழும்பூர் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் நமது செய்தியாளர் சிவராமன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்.
2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு எழும்பூர் தனித் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள். உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
99 விழுக்காடு நான் வெற்றி பெறுவேன், இரட்டை இலை சின்னம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களது முக்கியமான 5 வாக்குறுதிகள் என்னென்ன? தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன?
இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியையும் இத்தொகுதிக்குசெய்து தரவில்லை. குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கின்றன. 25 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், என்னால் இவற்றையெல்லாம் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.
’திமுகவின் கோட்டை எழும்பூர்’ என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் தென் மாவட்டத்தை விட்டு எழும்பூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தது ஜெயலலிதா தான். 85 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். அன்றைய காலத்தில் எனக்கான வாய்ப்பு இல்லாமல் போனது. மீண்டும் ஒரு வாய்ப்பாகதான் இந்த வாய்ப்பை இப்போது நான் பார்க்கிறேன். நடுத்தர மக்கள் அடித்தட்டு வர்க்க மக்கள் வறுமையில் உள்ளனர். சுதந்திரத்திற்குப் பின் இருந்தே திமுக எதுவும் செய்யவில்லை.
ஜான் பாண்டியன் சிறப்பு நேர்காணல் சென்னையில் உள்ள பட்டியிலன மக்களுக்கான திட்டம் என்ன? கூவம் ஆற்றக்கரையோரம் உள்ள மக்கள் புறநகருக்குச் செல்கின்றனர், அவர்களுக்காக ஏதேனும் திட்டம் உள்ளதா?
ஏற்கனவே 750 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வழங்க முடியவில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும். 40 ஆண்டுகள் போராட்டம் காரணமாக இந்தக் கோரிக்கையை மாநில அரசும் மத்திய அரசும் நிறைவேற்றி உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:பிரதமர், முதலமைச்சருக்கு ஜான் பாண்டியன் நன்றி!