சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொடியேரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உடல் சோர்வாக இருப்பதுதான் பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை உள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொற்றுநோயைத் தவிர்க்க பார்வையாளர்களையும் குறைக்க வேண்டும் என மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது கேரளாவில் பாரத் ஜோடோ யாத்ரா செலவழித்த நாட்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (மார்க்சிஸ்ட்) காங்கிரஸும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, இங்குள்ள இடது கட்சியின் பிரிவு செவ்வாய்கிழமை, அணிவகுப்பை எதிர்க்க எந்த காரணமும் இல்லை எனவும் கட்சியின் நிலைப்பாடு யாத்திரைக்கோ அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த ஜனநாயக செயல்முறைக்கும் எதிரானது அல்ல எனவும் தெரிவித்தார்.