சென்னை:மாலத்தீவு சென்று திரும்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்ந்த துறை சார்பாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்காக ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேசன் லிமிடெட் சார்பாக மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரனும், நானும் மாலத்தீவு சென்று அங்கு எந்தெந்த பணிக்கு ஆட்கள் தேவை என கேட்டறிந்து பல்வேறு ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசினோம்.
அந்த அரசின் சார்பில் இந்திய தூதரகம் அதிகாரிகளையும் அந்த நாட்டினுடைய அமைச்சர்களையும். மக்கள் பிரநிதிதிகளையும் சந்தித்து அங்கு இருக்கிற நிலையெல்லாம் அறிந்து வந்திருக்கிறோம். முதலமைச்சரிடம் நாளை மறுநாள்(நவ.3) அங்கு இருக்கிற நிலையை எடுத்து கூற உள்ளோம்.