தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (புதன்கிழமை) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, தொழிலாளர் நலத்துறை அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிலோபர் கபில், 'தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்திட 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.1.28 கோடி நிதி வழங்கப்படும். வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு வருமான உச்சவரம்பு ஐம்பதாயிரத்திலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதற்காக 2.33 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
32 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த நிதி ஒதுக்கீடு: அமைச்சர் - நிதி ஒதுக்கீடு
சென்னை: வேலைவாய்ப்பு முகாம் நடத்திட 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.1.28 கோடி நிதி வழங்கப்படும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபில் அறிவித்துள்ளார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆட்டோமொபைல் பயிற்சியாளர்களுக்கு மின்சார வாகன பராமரிப்பு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 53 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு மின்சார வாகனங்கள் 4.77 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும். வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள பெண்கள் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 16 புதிய இடங்களில் 14.30 கோடி ரூபாய் செலவில் அரசு இஎஸ்ஐ மருந்தகங்கள் புதிதாகத் தொடங்கப்படும்' என அறிவித்தார்.