தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் சென்னையில் கைது - ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் சென்னையில் கைது

சென்னையில் பதுங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டை எண்ணூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட்
ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட்

By

Published : Oct 27, 2021, 12:29 PM IST

சென்னை:ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சுஹார் கஞ்ச் என்ற மாவோயிஸ்டை அம்மாநில காவல்துறையினர் தேடி வந்தனர்.

இவர் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மாவோயிஸ்ட்டுக்களுக்கு ஆயுதப்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த சுஹார் கஞ்ச், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தப்பி தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக ஜார்க்கண்ட் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சுஹார் கஞ்ச் எண்ணூரில் கட்டட வேலை செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, எண்ணூர் காவல்துறையினர் சுஹார் கஞ்ச்யை இன்று(அக்.27) கைது செய்தனர். இவரிடம், க்யு பிரிவு காவலர்கள் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு கொண்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் சுஹார் கஞ்ச்சை அழைத்து செல்ல ஜார்க்கண்ட் காவல்துறையினர் சென்னை வரவுள்ளனர்.

இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ - கி.வீரமணி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details