ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்துவிட்டு விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா நீரை பெறுவதற்காக ஆந்திர முதலமைச்சரை சந்திக்க நானும் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்று தமிழக முதலமைச்சர் தந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தோம்.
நாங்கள்தான் வெற்றி பெற்றோம் - அமைச்சர் ஜெயக்குமார் - சென்னை விமானநிலையம்
சென்னை: வேலூர் தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்க ஆந்திர முதலமைச்சர் ஒப்புக்கொண்டு உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் மூலம் சென்னையில் உள்ள குடிநீர் பற்றாக்குறை வேகமாகத் தீர்ந்துவிடும்" என்றார்.
இதன்பிறகு வேலூர் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள்தான் வெற்றி பெற்றோம். திமுக பணத்தை நம்பி வெற்றி பெற்றது. வெறும் 8000 ஓட்டுக்காக 125 கோடி செலவிட்டு திமுக வெற்றி பெற்றுள்ளது. இது மோசடியான வெற்றி. எங்களைப் பொறுத்த வரை மக்கள் மனதில் நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். பழம் நழுவி பாலில் விழும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கீழே விழுந்துவிட்டது விரைவில் பழம் பாலில் விழும்" என்றார்