சென்னை:மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று (பிப்.24) கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி சென்னை ராயப்பேட்டையின் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் எழுச்சிமிக்க நாளாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு என்றும் அழிவே கிடையாது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்றாரோ, அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார்.