தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உண்ட கட்சிக்கே ரெண்டகம்" செய்யும் திருநாவுக்கரசர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் திருநாவுக்கரசர் என 1989ஆம் ஆண்டு சட்ட பேரவையில் நடைபெற்ற விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Jayakumar said Thirunavukkarasar is hiding the truth in Jayalalithaa attack issue
ஜெயக்குமார் விமர்சனம்

By

Published : Aug 14, 2023, 3:14 PM IST

சென்னை: ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரையை நோக்கி "தொடர் ஜோதி ஓட்டம்" நடைபயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஜெயக்குமார், “நீட் தேர்வு தோல்வியால் மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பாகவே இருக்கும் என கூறியிருந்தார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் இதற்கு எத்தனை முறை திமுக அழுத்தம் கொடுத்தது, பாராளுமன்றத்தில் நீட் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன குரல் கொடுத்தார்கள்?.

நீட், கச்சத்தீவு உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த ஒரு உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் திமுகவினர் குரல் கொடுக்கவில்லை. கைகளில் பேண்ட் கட்டுவது, சாதி அடையாளத்தை அணிவது போன்றவை அம்மா ஆட்சியில் நடந்ததா? யார் இவ்வாறு செய்தாலும் அவர்களை கைது செய்தால் மட்டுமே இது போன்ற செயல்கள் நடைபெறாது. ஜெயலலிதா காலத்தில் மொழிவாரியாக சாதி வாரியாக, இன வாரியாக யாரும் பேசியதில்லை, வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.

எப்ப எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆளுங்கட்சி துஷ்பிரயோகம் ஒரு பக்கம், சாதி கலவரம் ஒரு பக்கம் உள்ளது. யார் என்று குற்றவாளியை வெளிப்படையாக அறிந்து குற்றவாளி சிறையில் அடைக்கப்பட வேண்டும். குழுவை உருவாக்கி என்ன ஆகப் போகிறது. உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்றுச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மறைத்து பேசும் திருநாவுக்கரசின் செயல் வருத்தத்திற்கு உரியது.

பெண்ணென்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளை பேசி மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள். அதனால், சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஒரு பெண்ணை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்திய துரியோதன, துச்சாதன கும்பல் தான் இன்று திமுக கும்பல். ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து, நீட்டை ஒழிப்பதாக இருக்கும் என்று சொன்னார்கள் அந்த சூட்சுமம் எங்களுக்கு தான் தெரியும் என்றெல்லாம் சொன்னார்கள்.

அதற்கான கையெழுத்தை முதலில் போட்டிருக்க வேண்டியதுதானே. குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக நடைபெற்ற தற்கொலைகள் மனதை பதைபதைக்க செய்கிறது. திமுக உரிமையை மீட்டெடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவே இல்லை" என கூறினார்.

இதையும் படிங்க: "சில மாதங்களில் நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும்; இருவரது மரணமே இறுதியாக இருக்கட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details