தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் தற்போது டெல்லியில் இருக்கிறார்கள்’ - ஜெயக்குமார்

சென்னை: தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் தற்போது டெல்லியில் வியாபாரிகள் ஆகியுள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar

By

Published : Jun 19, 2019, 7:37 PM IST

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு - 2019’ என்ற சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. அதனை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் நம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான். மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. இறால் உள்ளிட்டவற்றை வளர்ப்பதன் மூலம் நம் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா வளங்களையும் பெருக்குவதற்கு தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஜெயக்குமார் பேச்சு

100 விழுக்காடு மழையில் 40 விழுக்காடு மழைதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 60 விழுக்காடு மழை இல்லாதபோது, அதைவைத்து அரசியல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வீராணம் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்றால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நவம்பர் வரை குடிநீர் பிரச்னை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அதேபோல், திமுக எம்.பி.க்கள் பதவியேற்பின் தமிழ் வாழ்க என கூறியது குறித்த கேள்விக்கு, “தமிழ் எங்கு ஒலிக்க வேண்டும், ஆனால் ஏட்டிக்கு போட்டியாக திமுகவினர் செயல்பட்டுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழுக்கு திமுக என்ன செய்தது. திமுக 17 வருடமாக ஒன்றுமே செய்யவில்லை. மேலும் திமுகவினருக்கு தமிழ் வியாபாரம்தான், தமிழை நேசிக்கிற ஒரே இயக்கம் அதிமுக. தற்போது டெல்லியில் அவர்கள் வியாபாரிகள் ஆகியுள்ளனர்” என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details