தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: அதிமுக பிரமுகருக்கு சிறை! - subhasri death

சென்னை: சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த அதிமுக பிரமுகரை அக். 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுபஸ்ரீ

By

Published : Sep 28, 2019, 12:01 PM IST

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருந்தார். இதையடுத்து, காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி செர்லி, ஜெயகோபாலை அக்டோபர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details