சென்னையில் எப்போதும் சாலைகள் அனைத்தும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் காலை நேரங்களில் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் மாணவர்கள் செல்வதால், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தாலும், மாடுகள் மேய்வதில் சிரமம் இருந்தன.
மக்கள் ஊரடங்கால் உல்லாசமாக சுற்றித்திரியும் மாடுகள்! - Corona Virus
சென்னை: மக்கள் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி இருக்கும் சென்னை மாநகர சாலைகளில் மாடுகள் உல்லாசமாக சுற்றித்திரிந்தன.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும் என வேண்டும்கோள் விடுக்கப்பட்டது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் சாலைகள் சற்று வெறிச்சோடி காணப்படும். ஆனால் ஊரடங்கால் சாலைகள் முழுவதுமே வெறிச்சோடி காணப்பட்டன. ஊடரங்கால் சென்னை கேகே நகர், அசோக்நகர் உள்ளிட்ட முக்கியப்பகுதி சாலைகளில், அப்பகுதியைச் சேர்ந்த மாடுகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்தன. சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாமல் இருந்ததால், புதிய சூழலில் தாங்கள் செல்வதாக மாடுகள் உணர்ந்ததை அவைகளின் ஓய்யார நடைமூலம் காணமுடிந்தது.
இதையும் படிங்க:'பற்றாக்குறை இல்லை; பதுக்கிட வேண்டாம்'