தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன.31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆணையர் பிரகாஷ்! - Chennai Corporation Commissioner Prakash

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஜன.31ஆம் தேதி ஆயிரத்து 644 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

போலியோ சொட்டு மருந்து முகாம்  சென்னை போலியோ சொட்டு மருந்து முகாம்  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  Polio Vaccine Camp  Chennai Polio Vaccine Camp  Chennai Corporation Commissioner Prakash  jan.31 Polio Vaccine Camp in Chennai
Chennai Corporation Commissioner Prakash

By

Published : Jan 27, 2021, 10:39 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"ஐந்து வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அருகிலுள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்குச் சென்று போட்டுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொளவதிலிருந்து விடாமல் இருப்பதற்காக அடையாள மை வைக்கப்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து போடுவதால் எவ்வித தீங்கும் கிடையாது. குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக போடப்பட்டிருந்தாலும் 31 ஆம் தேதி நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள், சுற்றுலாப் பொருள்காட்சி, கோயம்பேடு பேருந்து நிலைம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்து 644 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து முகாம் விவரங்கள்

இந்த முகாம் காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 பேர் ஈடுபடுத்த உள்ளனர். இந்தச் சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!

ABOUT THE AUTHOR

...view details