ஐஐஎம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டவுள்ளார்.
முதலமைச்சர் தேர்தல் பரப்புரை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை ராமநாதபுரத்தில் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் 17 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கவுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் 9 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.