சென்னை:சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. இந்தப் பாடல் குறித்த ட்விட்டர் பதிவுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த சில நாட்களாக பகிர்ந்து வந்தது. குறிப்பாக வெளியான பதிவுகளில் ரஜினிகாந்த் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், இப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் முதல் பாடலாகிய 'காவாலையா' வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அப்பாடலில் நடிகை தமன்னா ஆடிய நடனத்தை உலகின் பல்வேறு இடத்தை சார்ந்த மக்கள், பிரபலமான இடங்களில் நடனமாடி அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும படிங்க:படங்களில் இருந்து விலகி, வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யும் சமந்தா!
இந்நிலையில் தற்போது 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாடலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் யூடியூபில் பகிர்ந்துள்ளது. பாடலில் வரும் வரிகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கம்பீர குரலில் வரும், "ஹுக்கும்..டைகர் கா ஹுக்கும்" போன்ற வசனங்கள்: ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் இப்படத்தை குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் இப்படம் குறித்த ட்விட்டர் பதிவு வெளியிடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவலை அனிருத், இப்படத்தின் இயக்குநர் நெல்சன் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் இயக்கும் 'லால் சலாம்' எனும் படத்தில் மொய்தீன் பாய் எனும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தனது 170-வது படத்தை 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய TJ ஞானவேல் இயக்க உள்ளதாக, அப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இதையும படிங்க:படங்களில் இருந்து விலகி, வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யும் சமந்தா!