சென்னை:மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அதேப் பகுதியை சேர்ந்த ராகுல் சிராஜ்(23) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு காதலாக மாறியது. இதனிடையே, ராகுல் சிராஜ் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பழகி ரூ.10 லட்சம் சுருட்டிய மன்மதனுக்கு சிறை - ஏமாற்றிய மன்மதனுக்கு சிறை
இன்ஸ்டாகிராமில் பழகி திருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடமிருந்து ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அதோடு தொழில் தொடங்குவதாகக் கூறி, பெண்ணிடம் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு நீண்ட நாட்களாக தொடர்பை துண்டித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சயடைந்த அந்தப்பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் சிராஜை கைது செய்து நேற்று (அக்.25) நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இன்ஸ்டா காதல் மன்மதன் கைது!