தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் சிறைத் தண்டனை கைதிகளுக்கு தடுப்பூசி! - சிறைச்சாலை

தமிழ்நாடு சிறைகளில் பணிபுரியும் சிறைத்துறை பணியாளர்கள், தண்டனை கைதிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

jail-workers-and-convicted-prisoner-100-percentage-vaccinated-in-tamilnadu
தண்டனை கைதிகளுக்கு 100விழுக்காடு கரோனா தடுப்பூசி!

By

Published : Jun 28, 2021, 10:41 PM IST

சென்னை:கரோனா 2ஆவது அலையின் ஆபத்தை தமிழ்நாடு சிறைத்துறை எதிர்பார்க்கவில்லை. இந்த அலையில், சிறைக்கைதிகளை விட சிறைத்துறை அலுவலர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையில், சிறைத்துறையில் பணிபுரிபவர்கள் 222 பேரும், விசாரணை கைதிகள் 74 பேரும், தண்டனை பெற்ற கைதிகள் 16 பேரும் பாதிக்கப்பட்டனர். சிறைத்துறைப் பணியாளர்கள் 12 பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, 37 சிறைத்துறை பணியாளர்கள், 26 விசாரணை கைதிகள், ஒரு தண்டனை கைதி கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா அறிகுறி தெரிந்தாலே அவர்கள், யாருடைய தொடர்பில் இருந்தார்கள்? என்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது.

சிறையில் தடுப்பூசி விழிப்புணர்வு

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வை தமிழ்நாடு சிறைச்சாலைகளில் ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அனைத்து சிறைத்துறை டிஐஜிக்கள், சிறைத்துறை கண்காணிப்பாளர்கள், சிறைத்துறை அலுவலர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக டிஜிபி கரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை போஸ்டல் சிறையில் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தினமும் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆய்வு செய்துவருகிறார்.

100 விழுக்காடு தடுப்பூசி

தமிழ்நாடு சிறைகளில் பணிபுரியும் 4,197 சிறைத்துறை பணியாளர்களும், 4,099 தண்டனை பெற்ற சிறைக்கைதிகளும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். விசாரணை கைதிகளில் 69 விழுக்காட்டினர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை செலுத்த காத்திருப்பவர்கள் யார்? யார்? சிறைக்குள் வருபவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது, கரோனா பாதிக்கப்பட்டு 3 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரை மத்திய சிறையில் கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி!

ABOUT THE AUTHOR

...view details