தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”அரசின் நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அரசுத் துறை ஊழியர்கள் இரவு பகல்பாராது தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டங்களில் கலந்துகொண்ட ஆறாயிரத்து 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்றைய தேதிவரை பணி ஓய்வுபெற இயலாமலும், பதவி உயர்வு போன்ற உரிமைகளைப் பெற இயலாமலும், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் கூட்டணி முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் இதனால் தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தமும், வேதனையும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையிலும், இணக்கமான சூழலை ஏற்படுத்தும்வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் துயரத்தைப் போக்கும்வகையிலும் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(பி) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்துசெய்து உதவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:’அகவிலைப்படியை நிறுத்தியது வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா?’