தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அடுத்தக்கட்ட போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு - chennai district news

சென்னை : தமிழ்நாடு அரசை எச்சரிக்கும் வகையில் ஜார்ஜியாவில் அடுத்தக்கட்ட போராட்டம் இருக்கும் என ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.

jacto-geo-protest-in-chennai
jacto-geo-protest-in-chennai

By

Published : Feb 10, 2021, 8:13 PM IST

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இந்த போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், ”புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய வேறுபாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டோம்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஆனால் எட்டாம் தேதி எழிலகத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு போகும்போதே காவல் துறையினர் எங்களை கைது செய்தனர். காவல் துறையின் அடக்குமுறையை மீறி 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் உடலை வருத்திக் கொண்டு இருந்துள்ளோம். ஆனாலும் அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை கேட்கவில்லை. ஜாக்டோ - ஜியோவின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து வரும் 13ஆம் தேதி திருச்சியில் உயர்மட்ட குழு கூடி முடிவு செய்து அறிவிப்போம். அந்தப் போராட்டம் எங்களை அலட்சியப்படுத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இருக்கும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details