சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவரான பேரறிவாளன், இன்று (மே18) உச்ச நீதிமன்றத்தால் அரசியல் அமைப்பு சாசனம் 142இன் கீழ் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலையான நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் படி பேரறிவாளனையும் மற்ற 6 பேரையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.