எஸ்.என்.ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, பாண்டிச்சேரி, கோவா உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.என்.ஜே மதுபானம் தயாரிக்கும் ஆலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு மதுபானம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மதுபான ஆலை தொழிற்சாலையில் வருமானவரித்துறை சோதனை! - வருமானவரித்துறை சோதனை
சென்னை: எஸ்.என்.ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
IT raid
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராகவும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.என்.ஜே நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள எஸ்என்ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான இடத்தில், 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.