தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடிபி எண் தொடர்பாக தகராறு - ஓலா டாக்சி ஓட்டுனரால் ஐ.டி. ஊழியர் அடித்துக்கொலை? - ola taxi driver arrested

சென்னையில் ஓடிபி எண் தெரிவிப்பது தொடர்பான தகராறில், ஐ.டி. ஊழியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓலா ஓட்டுனரால் ஐ.டி. ஊழியர் அடித்துக்கொலை
ஓலா ஓட்டுனரால் ஐ.டி. ஊழியர் அடித்துக்கொலை

By

Published : Jul 4, 2022, 10:25 PM IST

Updated : Jul 4, 2022, 10:59 PM IST

செங்கல்பட்டு : கன்னிவாக்கத்தை சேர்ந்தவர் உமேந்தர். இவர் கோவையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் எனக் கூறப்படுகிறது. சனி ஞாயிறு விடுமுறை என்பதால் தனது சொந்த ஊரான கன்னிவாக்கம் வந்துள்ளார்.

நேற்று (ஜூலை 3) ஞாயிற்றுக்கிழமை என்பதால் சினிமா பார்ப்பதற்காக தனது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளார். படம் முடிந்தவுடன் வீடு திரும்புவதற்காக ஓலா ஆப் மூலம் கார் ஒன்றை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி இன்னோவா கார் ஒன்று வந்துள்ளது. காரில் உமேந்தர் மற்றும் அவருடன் வந்த அனைவரும் ஏறி அமர்ந்த பிறகு, ஓடிபி எண் தெரிவிக்குமாறு உமேந்தரிடம் ஓலா நிறுவன கார் ஓட்டுனர் ரவி கேட்டுள்ளார். ஒடிபி எண் தெரிவிப்பதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுனர் ரவிக்கும் உமேந்திருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஓட்டுனர் ரவி கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், அதில் உமேந்தர் சரிந்து விழுந்ததாகவும் தெரிகிறது. உமேந்தர் குடும்பத்தினரின் அலறலைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு உமேந்திரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சென்ற கேளம்பாக்கம் போலீசார், ஓலா ஓட்டுனர் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

Last Updated : Jul 4, 2022, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details