தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண் ஐ.டி. ஊழியர்: குவியும் புகார் - 50 லட்சம் வரை மோசடி செய்த ஐடி ஊழியர்

சென்னை: ஏற்றுமதி தொழிலில் முதலீடு செய்தால் 20 விழுக்காடு லாபம் தருவதாகக்கூறி பல ஐ.டி. ஊழியர்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண் ஐடி ஊழியர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

cheating
cheating

By

Published : Feb 20, 2020, 11:16 PM IST

சென்னையை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். இவரது சகோதரி மூலம் அறிமுகமான ஐ.டி. ஊழியர் சுமித்ரா என்பவர், தன் கணவர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பதாகவும் இந்தியாவிலிருந்து தானியங்களில் ஏற்றுமதி செய்யும் தொழிலை, தாங்கள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிலில் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகையில் 20 விழுக்காடு பங்கு லாபம் தருவதாக ஆசைவார்த்தைக் காட்டியுள்ளார். இதனை நம்பிய சுந்தரும் மூன்று லட்ச ரூபாய் பணத்தை, சுமித்ராவிடம் கொடுத்துள்ளார். பின்னர் தொழிலில் லாபம் கிடைத்துவிட்டதாகக் கூறி மீண்டும் சுந்தரிடம் முதலீடு செய்யக்கோரி எட்டு லட்ச ரூபாய் வரை சுமித்ரா வாங்கியுள்ளார்.

ஐ.டி. ஊழியர் சுமித்தாவிடம் பணத்தை பறிகொடுத்தவர்

பின்னர் நீண்ட நாளாகியும் சுமித்ராவை தொடர்புகொள்ள முடியாததால், சுந்தருக்கு சுமித்ரா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதன் பின்புதான் சுந்தர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

இதுதொடர்பாக சுந்தர் பலரிடம் விசாரிக்கையில் சுமித்ரா தன்னுடன் பணிபுரியும் சக ஐ.டி. ஊழியர்களிடமும் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டு சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல்செய்து ஏமாற்றியது சுந்தருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சுந்தர் புகார் தெரிவித்துள்ளார்.

பணத்தை ஏமாந்த அனைவருமே சுமித்ராவை நம்பி எந்தவிதமான ஆவணங்களும், தகவல்களும் தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுமித்ராவின் கணவர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பதும் பொய் என்றும், அவர் பெருங்களத்தூரில் டீக்கடை வைத்திருப்பதை அறிந்து பணத்தை பறிகொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஐ.டி. ஊழியரான சுமித்ரா மீது தொடர்ந்து காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க:ஆபாச பேச்சு, நிர்வாண வீடியோ கால், உல்லாசம்: மன்மத லீலையில் திளைத்த வங்கி காசாளருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details