சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, இன்று இஸ்ரோவிற்கு மிகவும் முக்கியமான நாள். இவிகா திட்டத்தின் மூலம் ஒரு மாநிலத்திற்கு 3 பேர் வீதம் 108 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு வார காலம் பயிற்சி மே.13 ஆம் முதல் தொடங்கி இன்று வரை நடைபெற்றது. மாணவர்களை இந்தியா முழுவதும் மாணவர்களை தேடிப்பிடித்து, இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இந்த பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது.
சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்துவது எப்போது? - சிவன் பதில் - இவிகா திட்டம்
சென்னை: "சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை 9ஆம் தேதி அல்லது 16ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்" என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சிவன்
வருகிற 22ஆம் தேதி பிஎஸ்எல்விசி-46, ஆர்.எஸ்.ஆர் 2பி என்கிற செயற்கைக்கோளை நிலைநிறுத்தப் போகிறோம். சந்திராயன்-2, விண்கலம் ஜூலை 9ஆம் தேதி அல்லது 16ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளோம், என்றார்.