தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2019, 7:15 PM IST

ETV Bharat / state

சந்திராயன்-3 திட்டம் நிச்சயம் உண்டு - இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை: சந்திராயன்-3 திட்டம் நிச்சயம் உண்டு, சந்திராயன் 3 விண்ணில் செலுத்தும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

isro sivan
isro sivan

இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ஜிசாட் 3 செயற்கைக் கோளுடன் மற்ற நாடுகளின் 13 செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளோம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காக்டோசாட் 3 அதிக செயல்திறன் கொண்ட செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது. கட்டாயம் சந்திராயன் 3 திட்டம் உள்ளது. இத்திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சந்திராயன் 3 விண்ணில் செலுத்தும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆதித்யா மற்றும் ககன்யான் திட்டங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்புவது போன்ற பல திட்டங்களை 2020ஆம் ஆண்டில் செயல்படுத்துப்படும்.

இஸ்ரோ தலைவர் சிவன்

அடுத்த மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் இதில் பங்கேற்கும் தகவல் பரிமாற்றங்களும் செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டமும் உள்ளன. தற்போது நிலவுக்கு மனிதனை அனுப்பும் எந்த திட்டமும் இஸ்ரோவிடம் இல்லை.

விஞ்ஞானிகளுக்கு உதவும் வகையில் சந்திராயன்-2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்ற ககன்யான், ஆதித்யா போன்ற எந்த இஸ்ரோ திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுமி பலி!

ABOUT THE AUTHOR

...view details