சென்னை:தலைமைச்செயலகத்தில் உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைத் தலைவர் அகமது பாரூக் நேரில் சந்தித்து, கோவை இஸ்லாமிய சிறைவாசிகள் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடி வருவதாகவும், அவர்களை மதத்தின் பெயரால் பாரபட்சம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள்; விடுதலை செய்யக்கோரிக்கை
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை மதங்களைப் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டுமென உள்துறைச்செயலாளரிடம் இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைத் தலைவர் அகமது பாரூக், ”தமிழக அரசு நீண்டகால சிறைவாசிகள் 700 பேரை, அண்ணா பிறந்தநாளை வைத்து விடுதலை செய்வோமென அரசாணை வெளியிட்டிருந்தது. ஆகவே நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை மத ரீதியிலான பாரபட்சம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும். மேலும் உள்துறைச்செயலாளர், ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் கமிஷன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென செயலாளர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளது: சீன வெளியுறவுத்துறை!