சென்னை:காசா பகுதியில் இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு, ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது.
ஆனால், இன்னும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு முடிவும் தெரியவில்லை. மேலும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் கட்சி கூட்டமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறன்.
இந்நிலையில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசையும், அதற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்து சென்னை எழும்பூரில் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடபெற்றது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, “பாலஸ்தீனம் மீது யூத அரசு வன்மையான தாக்குதலை நடத்தி வருவதை கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்கள் சொந்த மண்ணுக்காக போராடுவதை பயங்கரவாதிகள் என கூறுவதை ஏற்க்க முடியாது. காந்தி காலத்தில் இருந்து பாலஸ்தீன ஆதரவையை இந்தியா எடுத்தது ,அதே நிலையை தற்போதும் தொடர வேண்டும்.
பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுப்பது மட்டும் மல்லாமல் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும். ஐ.நா-வின் போர் நிறுத்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.