தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரும்புக்கம்பி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு - இரும்பு கம்பி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

சென்னை: செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, இரும்புக் கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக இரும்புக் கம்பி உற்பத்தி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

iron industry
iron industry

By

Published : Mar 27, 2021, 7:22 PM IST

கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த ஆறு மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் எனச் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவருவதாகவும், அதைக் காரணம்காட்டி அதிக விலைக்கு கம்பிகளை விற்பனை செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, டாடா, ஜெ.எஸ்.டபிள்யூ., செயில், விசாகே, திருமலா, காமாட்சி, அக்னி, இந்த்ரோலா, கிஸ்கோ ஆகிய இரும்புக் கம்பி தயாரிக்கும் நிறுவனங்களும் கூடுதல் விலைக்கு கம்பிகளை விற்று சட்டவிரோத லாபம் ஈட்டிவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனால் கட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய சிபிஐயிடம் மார்ச் 6ஆம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தங்கள் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இரண்டு வாரத்தில் பதிலளிக்கும்படி, சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details