தமிழ்நாட்டுக்கு புதிய தலைமை செயலர் - முதலமைச்சராக பதவியேற்றார் மு.க. ஸ்டாலின்
16:57 May 07
தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை செயலராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித் தாள் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள வெ. இறையன்பு ஐஏஎஸ் நாகப்பட்டினம் சார் ஆட்சியராக பணியை தொடங்கியவர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சுற்றுலாத் துறை செயலாளராகவும் பணியாற்றியிருக்கும் இறையன்பு 2019ஆம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநராக இருக்கிறார்.