மாஸ் காட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024..! எவ்வளவு முதலீடு! முழு விபரமும் இதோ! - business news
2024 Global Investors Conference: சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6.6 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை: சென்னையில் நேற்று (ஜன. 7) மற்றும் இன்று (ஜன. 8) ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
இதன் மூலம் நேரடியாக 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேரும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேரும் வேலைவாய்ப்பினை பெறுவர் என்றும் மொத்தமாக 27 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் ஒரு சிலவற்றின் பெயர்களும், அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ள இடங்கள் மற்றும் முதலீட்டுத் தொகை ஆகியவற்றின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு.