சென்னை:சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சிக்கான (Internship) முதல்நாள் ஆட்தேர்வு முகாம் 6, 13 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. நேரிலும் ஆன்லைனிலும் நேர்காணல் நடத்தி முதன்முறையாக ஹைப்ரிட் முறையில் இந்த உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் பங்கேற்க முடிந்தது.
இந்த முகாமில் 7 நிறுவனங்களிடம் இருந்து 15 சர்வதேச உள்ளகப்பயிற்சிக்கான வாய்ப்புகள் வரப்பெற்றுள்ளன. உள்ளகப்பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 48 விழுக்காடு உயர்வடைந்துள்ளது. மேலும், புதியதாக வருகைதந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியின் 2022-23 பேட்ச் மாணவர்களுக்காக நடத்திய உள்ளகப் பயிற்சிக்கு (Internship) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விழுக்காடு முதல் நாளிலேயே 32 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடியின் ஆலோசகர் முருகவேல் கூறுகையில், "தொழில்முறைப் பயிற்சி என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதியாகும். தாங்கள் கற்றறிந்த திறன்களைப்பயன்படுத்தவும் மெருகேற்றிக்கொள்ளவும் மாணவர்களுக்கு அங்குதான் வாய்ப்புக் கிடைக்கின்றன.