தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; இசைவு கடிதம் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! - TamilNadu CM MK Stalin

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவரிடம் இசைவுக் கடிதத்தினை வழங்கியுள்ளார்.

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி!
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி!

By

Published : May 14, 2022, 6:45 PM IST

சென்னை: விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வருகிற செப்டம்பர் 26 அன்று தொடங்கி அக்டோபர் 2 வரை சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

இதனையொட்டி, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியினை சென்னையில் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான இசைவுக் கடிதத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் வழங்கினார்.

மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

ABOUT THE AUTHOR

...view details