சிவகங்கையைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலைவாணி உள்பட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.
அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஆனால், தேர்வு நடைமுறையை முறையாக பின்பற்றி வெளியிடவில்லை, தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளது. தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை. நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடைவிதித்தார். மேலும், இவ்வழக்கு குறித்து மருத்துவத் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.