சென்னை: தமிழ்நாடு அரசு கரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாள்கள் எனத் தடுப்பூசி முகாமை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் எனத் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொது இடங்களில் கூடும் மக்களிடம் கரோனா தடுப்பூசி (Corona vaccination) செலுத்தியது குறித்து அரசு அலுவலர்கள் உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.