தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நேற்று (மே 14) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகி மற்றும் வினித் கோத்தாரி பி.என். பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் குறிப்பிடுகையில், "மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. டாஸ்மாக்கிற்கு பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஏற்படுத்த குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்களை கொண்டுச் சென்று மதுபானம் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். தற்போதைய நிலையில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வது தமிழ்நாட்டில் சாத்தியமற்றது" என வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கை திறக்கவிடாமல் போராட்டத்தில் குதித்த மக்கள்: அதிர்ச்சியில் மது பிரியர்கள்!