தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை! - மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை
மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை

By

Published : Jun 10, 2021, 11:53 AM IST

சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆசிரியர் ஆனந்தனை கைது செய்துள்ளனர்.

மேலும் பல மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகளை நேரில் வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் கல்விக் குழும தலைமை கல்வி அலுவலர் பிரேமலதா பூபதி, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் அப்போதைய முதல்வர் ப்ரீத்தி நாராயணன் ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.

மகரிஷி வித்யா மந்திர் நிர்வாகிகளிடம் விசாரணை

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க: உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த இந்திய கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details