தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாட புத்தகத்தில் நெல் ஜெயராமன்! - Nel jeyaram

சென்னை: பாரம்பரிய நெல்ரகங்களைக் காக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்த நெல் ஜெயராமன் குறித்த விஷயங்களை 12ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் தமிழ்நாடு அரசு சேர்த்துள்ளது.

நெல்ஜெயராமன்

By

Published : May 29, 2019, 11:00 AM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்த இவர், திருத்துறைப்பூண்டியில் அச்சகத் தொழிலாளியாக பணி செய்து வந்தார்.

இந்நிலையில் நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003ஆம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரை ஒருமாத காலம் நம்மாழ்வார் நடத்திய நடைப்பயணத்தில் ஜெயராமன் கலந்து கொண்டார். அதனால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் ஆர்வம் அவருக்குத் தோன்றியது. இதையடுத்து 2006ஆம் ஆண்டு முதல் நெல்திருவிழாவை அவர் நடத்தி வந்தார். இதில் நமக்கு முந்தைய தலைமுறையினரே மறந்துபோன ஏராளமான நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இப்படி பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க நெல் ஜெயராமன் செலுத்திய ஆர்வத்தைப் பாராட்டி, பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரை கெளரவிக்கும் விதமாக, ஜெயராமன் பற்றிய சிறு குறிப்பை 12ஆம் வகுப்பு தாவிரவியல் பாடப்புத்தகத்தில் தமிழ்நாடு அரசு சேர்த்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details