தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை! - வெளிநாடுகளில் சிக்கி இந்தியர்கள் மீட்பு

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 476 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியர்கள் மீட்பு
இந்தியர்கள் மீட்பு

By

Published : Aug 12, 2020, 3:30 PM IST

கத்தாா் நாட்டின் தலைநகா் தோகாவிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று (ஆகஸ்ட் 11) மாலை 175 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அவா்களுக்கு மருத்துவப் பரிசோதணை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 96 போ் அரசின் இலவச தங்கும் இடத்திற்கும் 79 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான தனியார் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனா்.

அதேபோல் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக, 33 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று (ஆகஸ்ட் 11) இரவு சென்னை வந்தது. அவா்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 4 போ் அரசு இலவச தங்குமிடத்திற்கும், 27 பேர் தனியார் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனா்.

மேலும் ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் 131 இந்தியா்களுடன் நேற்று (ஆகஸ்ட் 11) நள்ளிரவு சென்னை வந்தது. அவா்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 102 போ் அரசின் இலவச தங்குமிடத்திற்கும் 29 போ் தனியார் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனா்.

சிங்கப்பூரிலிருந்து 137 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை சென்னை வந்தது. அவா்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அதில் 65 போ் அரசின் இலவச தங்குமிடத்திற்கும் 72 பேர் தனியார் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனா்.

ABOUT THE AUTHOR

...view details