கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 583 இந்தியா்கள் இன்று(அக்.02) அதிகாலை வந்தே பாரத்தின் நான்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு வந்தனர். சிங்கப்பூரிலிருந்து 172 பேரும், அபுதாபிலிருந்து 142 பேரும், கத்தாா் நாட்டின் தோஹாவிலிருந்து 142 பேரும், துபாயிலிருந்து 127 பேர் என்று மொத்தம் 583 இந்தியர்கள் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்து சோ்ந்தனா்.
வந்தே பாரத் திட்டம் - வெளிநாடுகளிலிருந்து 583 பேர் சென்னை வருகை! - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 583 இந்தியா்கள் இன்று(அக்.02) அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனா்.
அவா்கள் அனைவருக்கும் குடியுரிமை, சுங்கம், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அவரவா் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து 536 இந்தியர்கள் 4 சிறப்பு தனி விமானங்களில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனா். இவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களான NRI, மற்றும் வெளிநாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் அனைவரும் மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு சென்றனா். இவர்களில் லண்டனுக்கு 116 பேரும், அபுதாபிக்கு 109 பேரும், கத்தாருக்கு 212 பேரும், துபாய்க்கு 99 பேரும் சென்றுள்ளனர். சென்னை சா்வதேச விமானநிலையத்தில் ஒரேநாளில் 1,119 இந்தியா்கள் பயணித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.