தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல்: கடலோர காவல் படையின் 12 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் - indian police coast guard

சென்னை: நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர காவல் படையின் 12 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

rescue team
rescue team

By

Published : Nov 25, 2020, 2:21 PM IST

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை அச்சுறுத்திவரும் நிவர் புயல் இன்று (நவ.25) நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீட்பு குழு

இதனால் கடலோரம், உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மீட்பு குழு

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புக்கு பின் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கடலோர காவல் படையின் 12 பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், மண்டபம் ஆகிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நிவர் புயல் தாக்குதல்: நாளையும் பொது விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details