தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை வழக்கு - ரத்து செய்த உயர்நீதிமன்றம் - இந்திய பாஸ்போர்ட்

பிரெஞ்ச் குடியுரிமை பெற்றதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக அண்ணன் - தங்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Indian
Indian

By

Published : Sep 10, 2022, 7:35 PM IST

சென்னை:இந்திய தந்தைக்கும், பிரெஞ்ச் தாய்க்கும் பிறந்த ஜெகப்பிரியன், திவ்ய பிரியா ஆகிய இருவருக்கும், அவரது தாயார் 1989ஆம் ஆண்டு பிரான்ஸ் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பிரெஞ்ச் குடியுரிமை பெற்றுள்ளார். இந்தியாவில் பிறந்து, தந்தையிடம் வளர்ந்த இருவரும், கடந்த 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, அதை புதுப்பித்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற விவரம் தெரிந்த பின் 2019ஆம் ஆண்டு பிரான்ஸ் பாஸ்போர்ட் பெற்ற இருவரும், இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்த நிலையில், பிரெஞ்ச் குடியுரிமையை மறைத்து இந்திய பாஸ்போர்ட்டை பெற்றதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணன் - தங்கை இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சிறு குழந்தைகளாக இருந்த மனுதாரர்களுக்கு, பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற விவகாரம் தெரியாது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற விவகாரம் மனுதாரர்களுக்கு தெரியாது என்பதால், அவர்களுக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும், உண்மையை மறைத்தார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் கூறி, இருவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அறியாத வயசு..! - போக்சோவை ரத்து செய்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details