தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளின் வாக்குகளை அள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு!

சென்னை: மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளின் வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி

By

Published : Mar 14, 2019, 8:11 PM IST

2019 மக்களவைத் தேர்தலில் “எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது” என்ற குறிக்கோளுடன் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் நோக்கத்தில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்ய பல சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களது தகவல்களை சேகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஓய்வூதியதாரர்கள் அலுவலகம், மாவட்ட கருவூலம் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற பல்வேறு துறைகளில் பெறப்பட்ட தகவல்களின்படி மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் பட்டியலை கண்டறிந்துள்ளது.

மாற்றுத்திறனாளி

அதன்படி, சென்னையில் 913 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி முறை போன்ற பல்வேறு வசதிகள் செய்துள்ளது. இதனிடையே, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் காண சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் 24 மணிநேரமும் தனி அலுவலர்களுடன் இயங்கும் அலுவலகத்திற்கு “94454 77699” “94454 77699” “94454 77699” என்ற கைப்பேசி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details