சென்னை:இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான டி.குகேஷ் இன்று (செப்.12) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலின், குகேஷுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜே.மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் செஸ் விளையாட்டு வீரர் குகேஷ்-இன் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் பேசுகையில், “இன்று முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதலமைச்சர் எனக்கு வழங்கினார். மேலும் செஸ் எலைட் டீமில் என்னை இணைத்து உள்ளனர்.