கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையான வங்கி சேவைகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் அதிகம் வெளியே செல்ல முடியாமல் தங்கள் பகுதியில் இருக்கும் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் மக்கள் வங்கி சேவைக்காக நீண்ட தூரம் செல்வதைத் தவிர்க்கும் விதமாகவும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் விதமாகவும் இந்தியன் வங்கி நடமாடும் ஏடிஎம் சேவையை சென்னையில் தொடங்கியுள்ளது.