மதுரை:இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 3166 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி, உரம், சுண்ணாம்புக்கல், கருவேலங்கரி, ஜிப்சம் ஆகியவை மதுரை கோட்டத்தில் இருந்து பல்வேறு ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 688 சரக்கு பெட்டிகள் அதிகம். கடந்த ஏப்ரல் மாதம் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 20.18 கோடியாகும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 3.12 கோடி அதிகம். மதுரை கோட்ட வணிக வளர்ச்சி குழுவின் முயற்சியின் காரணமாக பொட்டாசியம் உரம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து விஜயவாடா அருகே உள்ள கோவூருக்கு ஒரு முழு சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் மதுரை கோட்டத்திற்கு ரூபாய் 35 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.