சென்னை: பொதுவாக ஆந்திரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சாலை மார்க்கமாக தமிழ்நாட்டிற்குள் போதை பொருட்கள் வரும் போது மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், அதை மடக்கி பிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் படகுகள் மூலமாக சர்வதேச எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்காக இந்திய கடலோர பாதுகாப்பு படை வஜ்ரா,விக்ரஹா போன்ற அதிநவீன ரோந்து கப்பல் கொண்டு கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேற்று ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் இந்திய கடலோர பாதுகாப்பு படை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது, தமிழ்நாடு படகு ஒன்று சந்தேகத்திற்கு இடமான அடிப்படையில் சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்தப் படகை பிடித்து சோதனை நடத்தியதில் 300 கிலோ கஞ்சா மற்றும் 500 கிராம் ஹாசிஸ் எனப்படும் போதை ஆயில் இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
சர்வதேச கடல் எல்லையில் குறிப்பிட்ட நாட்டிகல் மைல் பகுதியில், தமிழ்நாட்டு படகுகள் மீனவர்கள் போல் வலம் வந்து போதைப் பொருள் கடத்துவது தெரியவந்துள்ளது. திட்டமிட்டபடி இலங்கை படகுகள் அங்கு வரும்போது போதைப் பொருள்கள் கை மாறுகின்றன எனவும் கூறப்படுகிறது. இதுபோன்று கடத்தலில் ஈடுபட முயன்ற போது தான் இந்த 300 கிலோ கஞ்சா மற்றும் 500 கிராம் ஹாசிஸ் ஆயில் இந்திய கடலோர பாதுகாப்பு படையால் பிடிபட்டது.
கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு மேலும் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகு தப்பி சென்றது. ஏற்கெனவே கடந்த நவம்பர் 15-ம் தேதி 3 டன் ’தெண்டு இலைகள்’ எனப்படும் புகைப்பதற்காக பயன்படுத்தப்படும் போதை இலைகளை, தமிழ்நாடு படகுகள் மூலம் சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்கு கடத்த முற்பட்ட போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படையின் வஜ்ரா என்ற கப்பல் கையும் களவுமாக பிடித்தனர். இதன் மதிப்பு 2 கோடி ரூபாய் ஆகும்.
கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் இருந்து இந்த படகுகள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் இந்திய கடலோர காவல் படையின் விக்ரஹா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கடந்த நவம்பர் 12-ம் தேதி இரண்டு இலங்கை படகுகள் சிக்கியது.
கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு குறிப்பாக, 175 நாட்டிக்கல் மைல் பகுதியில் 11 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இரண்டு படகுகளையும் பிடித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மண்டபம் பகுதியில் 420 கிலோ கடல் அட்டை கடத்தப்படுவதையும் அலுவலர்கள் தடுத்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு தமிழ்நாடு கடல் பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தலில் ஈடுபடும், மொத்த கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் குறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு, மரைன் காவல்துறையினர் உள்ளிட்ட தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இலங்கை கடற்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க:அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை ஆவணப்படுத்தும் ஓவியர்