தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ஐடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை: சுமார் ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு - பிரபல ஐடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

சென்னை தலைமையிடமாகக் கொண்டிருக்கும் பிரபல ஐடி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ. 1000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு
சுமார் ரூ. 1000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

By

Published : Nov 7, 2020, 5:28 PM IST

கடந்த நான்காம் தேதி சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஹெரிடேஜ் மதுரை குழுமம், தனியார் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த நிறுவனம் தொடர்பான வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்ய வருமான வரித்துறையினர் சென்றபோதுதான் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை ஒன் எனப்படும் ஐடி நிறுவனமானது சிங்கப்பூரில் நிறுவனத்தை தொடங்கி, மத்திய அரசு, ஆர்பிஐ அனுமதி இல்லாமல் 354 கோடி ரூபாய் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு வருவாயை கணக்கில் காட்டாமல் இருந்தது ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரி துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் ரூ. 1000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

மேலும் சிங்கப்பூரில் முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதன் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 ஏக்கர் நிலம் வாங்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து போலி கம்பெனிகள் நடத்தி அதன் மூலம் 337 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாட்டில் பங்குகள் வாங்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வருமான வரி சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவு கணக்கில் வராத வருமானத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பிடிபட்ட ஆவணங்கள் தொடர்பாக ஐடி நிறுவன நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் வருமான வரி சோதனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details