புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று துணை சபாநாயகர் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை சபாநாயகராக எம்.என்.ஆர் பாலன் பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!
புதுச்சேரி: சட்டப்பேரவை துணை சபாநாயகரின் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
துணை சபாநாயகராக பதவியேற்ற பாலன்
மேலும் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் துணை சபாநாயகர் பாலனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். பின்பு, சபாநாயகர் சிவக்கொழுந்து துணை சபாநாயகர் பாலனை இருக்கையில் அமர வைத்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.