நாடு முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், ஆகஸ்ட் மாதம் முதல் இ-பாஸ் இன்றி மக்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இருப்பினும், தமிழ்நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்புவோர்களுக்கும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கும் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்கள், தொலைபேசி/அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என கடந்த 14ஆம் தேதிதமிழ்நாடு அரசு தெரிவித்தது.